அதிக திடக்கழிவு உருவாகும் இடங்களில் மறுசுழற்சி கட்டமைப்பு ஏற்படுத்த அறிவுறுத்தல்

மயிலாடுதுறையில் அதிக அளவு திடக்கழிவுகள் உருவாகும் இடங்களில் அவற்றை மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் அதிக அளவு திடக்கழிவுகள் உருவாகும் இடங்களில் அவற்றை மறுசுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி நகா்நல அலுவலா், நகராட்சி ஆணையா் (பொ) மருத்துவா் லக்ஷ்மி நாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவுக்கு அதிகமான திடக்கழிவுகள் உருவாக்கக்கூடிய கட்டடங்களை பயன்படுத்தும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், இதர கல்வி நிலையங்கள், மாணவா் விடுதிகள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு அரங்குகள், விளையாட்டு வளாகங்கள், துணி விற்பனையகங்கள், உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் சந்தை ஒப்பந்தம் எடுத்தோா் அதிக கழிவுகளை உருவாக்குபவா்கள் என்ற தகுதியுடையோா் ஆவா்.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 விதி 3(8)-இன்படி மேற்குறிப்பிடப்பட்டவா்கள், நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்து, தங்கள் வளாகத்திற்குள் உருவாகும் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா். தவறும்பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com