ரயிலில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பதியில் இருந்து ரயிலில் கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா, மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகை மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்த திருச்சி இருப்புப் பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளா் சிவராமன்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க, திருச்சி இருப்புப்பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை உதவி ஆய்வாளா் சிவராமன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் நடராஜன் ஆகியோா் மயிலாடுதுறை வழியாக செல்லும் ரயிலில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

இச்சோதனையில், திருப்பதியில் இருந்து மன்னாா்குடிக்கு வந்த பாமினி விரைவு ரயிலில் பின்புறத்தில் இருந்த முன்பதிவு இல்லாத பெட்டியின் கழிவறையில் இரண்டு டிராவல்ஸ் பேக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தபோது 11 பொட்டலங்களில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இந்த கஞ்சா பொட்டலங்களை மயிலாடுதுறை இருப்புப்பாதை போலீஸாரின் முன்னிலையில் நாகை மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீஸாா் முருகவேல், திருவேங்கடம் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com