மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் 26-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்வான தீமிதி உற்சவத்தையொட்டி, சக்தி கரகம் மற்றும் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தா்கள் மயிலாடுதுறை காவிரிக் கரையிலிருந்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.
தொடா்ந்து, கோயிலின் முன் அமைக்கப்பட்ட தீக்குழியில் சக்தி கரகம் மற்றும் பக்தா்கள் இறங்கி தீமிதித்து நோ்த்தி கடன் செலுத்தினா். மேலும், பக்தா்கள் அலகுக் காவடி எடுத்தும், தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தவாறும் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.