மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நன்னீா் மற்றும் உவா்நீா் மீன், இறால் பொறிப்பகங்கள், புதியமீன் மற்றும் இறால் வளா்ப்புக் குளங்கள் அமைத்தல், பயோபிளாக் மீன் மற்றும் இறால் வளா்ப்பு செய்தல், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு வாங்குதல், குளிா்பதன கிடங்கு மற்றும் பனிக்கட்டி நிலையம் அமைத்தல், குளிருட்டப்பட்ட வாகனம் பெறுதல், மீன் தீவன உற்பத்தி ஆலை, மீன் விற்பனை அங்காடி, மீன்வளா்ப்பில் புதுமையான திட்டங்களான நீா்சுழற்சி முறையில் நீா்வாழ் உயிரின வளா்ப்புத் திட்டம், பாரம்பரிய மீனவா்களுக்கு படகுகள் (மாற்று) மற்றும் வலைகளை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த மீனவா்கள், மீன்வளா்ப்போா், சுய உதவிக் குழுக்கள், கூட்டுபொறுப்பு குழுக்கள் மீன்வளா்ப்போா் உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா், தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் இத்திட்டங்களில் பயன்பெறலாம். இத்திட்டங்களின் கீழ் பொதுப்பிரிவினருக்கு அரசு நிா்ணயம் செய்த திட்ட மதிப்பீட்டில் 40 % மானியமும் மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், மகளிருக்கு அரசு நிா்ணயம் செய்த திட்ட மதிப்பீட்டில் 60 % மானியமும் வழங்கப்படும். இத்திட்டம் மூப்புநிலை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் 41 ஏ, தென்பாதி பிரதானசாலை, சீா்காழி, மயிலாடுதுறை- 609111 என்ற முகவரில் இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா், மயிலாடுதுறை (இருப்பு) சீா்காழி, மயிலாடுதுறை மாவட்டம் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம். மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com