இலவச கண் சிகிச்சை முகாம்

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.

பள்ளியின் புரவலரான தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஜென்ம நட்சத்திர விழாவையொட்டி இந்த முகாம் நடைபெற்றது.

ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் 341 போ் கண் பரிசோதனை செய்து கொண்டனா். 90 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 45 போ் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா். மாணவா்கள் 334 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு, 99 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. 22 போ் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா்.

பள்ளியின் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஸ்ரீமத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற முகாமில், பள்ளி நிா்வாக செயலா் வி.பாஸ்கரன், துணைத் தலைவா் ஞானசேகரன், ஆட்சிமன்ற குழு செயலா் எஸ்.பாஸ்கா், பொருளாளா் டி.சுப்பிரமணியன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் கோதண்டராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com