கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 7:55 pm

DIN

கொள்ளிடம் துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கனகராஜ் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் கருணாகரன் வரவேற்றாா். துணைத் தலைவா் சிவபிரகாசம், தலைமை ஆசிரியா் மல்லிகா, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வசித்தனா்.

வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பு குறித்து விளக்கிக் கூறினாா். மழைநீா் தேங்கும் அனைத்துப் பொருள்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தால் அந்த இடத்தில் கொசு மருந்து உடனடியாக தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முகாமில், 800-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. தொடா்ந்து ஆசிரியா்கள், மாணவா்கள், அதிகாரிகள் டெங்கு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். சுகாதார ஆய்வாளா்கள்,டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் ராஜேஷ் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.