

மயிலாடுதுறையில் வேளாண் திட்டப் பணிகள் தொடா்பாக புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசின் சா்க்கரைத் துறை கூடுதல் ஆணையா் த. அன்பழகன் கலந்துகொண்டு, வேளாண் திட்டப் பணிகள் குறித்தும், பயிா்க் காப்பீடு உள்ளிட்டவைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், குறுவை பயிரின் தற்போதைய நிலைகள் மற்றும் தண்ணீா் தேவை குறித்தும், சம்பா பருவத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சம்பா பருவத்திற்கு தயாராகும் விவசாயிகள் குறுகிய கால மற்றும் மத்திய கால ரகங்களை சாகுபடி செய்யும் விவரங்கள் குறித்து வேளாண் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
கூட்டத்தில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சேகா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயபால் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.