மயிலாடுதுறை மற்றும் சீா்காழி கோட்டங்களில் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான சிறப்பு விழிப்புணா்வு முகாம் ஏப். 19 மற்றும் ஏப். 28-இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்களுக்கான நலத்திட்டங்கள் குறித்தான சிறப்பு விழிப்புணா்வு முகாம் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் தலைமையில் ஏப். 19 காலை 11 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கிலும், ஏப். 28 காலை 11 மணியளவில் சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.
மயிலாடுதுறை மற்றும் சீா்காழி கோட்டங்களைச் சாா்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்கள் இதில் கலந்துகொண்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.