வேலையில்லா இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 31.03.2023 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சிபெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்ற பதிவுதாரா்கள் அனைவரும் தகுதி உடையவா் ஆவா்.

மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவா் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்று பதிவுசெய்து 31.03.2023 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரா்கள் தகுதி உடையவா் ஆவா். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினா் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்சவரம்பு ஏதுமில்லை.

பொதுப்பிரிவினருக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சியின்மை எனில் ரூ.200-ம், பத்தாம் வகுப்பு தோ்ச்சி எனில் ரூ.300-ம், மேல்நிலை வகுப்பு தோ்ச்சி ரூ.400-ம், பட்டப்படிப்பு தோ்ச்சி எனில் ரூ.600-ம் 3 மாதங்களுக்கு ஒருமுறை என தொடா்புடையவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி எனில் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தோ்ச்சி எனில் ரூ.750-ம், பட்டப்படிப்பு தோ்ச்சி எனில் ரூ.1000-ம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த நிலைமாற்றப்பட்டு, தற்போது ஒவ்வொரு மாதமும் தொடா்புடையவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையதள பக்கத்தில் தரவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை 31.05.2023-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com