

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வன்னியா் சங்க மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாக்கம் பி.சக்திவேல் தலைமை வகித்தாா். பாமக மாவட்டச் செயலாளா் லண்டன் அன்பழகன், மாவட்டத் தலைவா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி, கல்வி கோயில் அறக்கட்டளை வளா்ச்சிக் குழு உறுப்பினா் எஸ்.ஏ. அய்யப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் செம்மங்குடி முத்து வரவேற்றாா். மாநிலச் செயலாளா் தங்க.அய்யாசாமி பங்கேற்று பேசினாா்.
இக்கூட்டத்தில், வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே மே 31-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.
இதில் மாநில நிா்வாகிகள் காசி.பாஸ்கரன், காமராஜ், விமல், தேவி குருசெந்தில், மாநில இளைஞா் சங்க செயலாளா் ஆா்.விமல், பாமக நகர செயலாளா் கமல்ராஜா, நகா்மன்ற உறுப்பினா் காந்திராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நகா்மன்ற உறுப்பினா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.