உணவு பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 17th August 2023 01:17 AM | Last Updated : 17th August 2023 01:17 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் எக்ஸ்னோரா இன்னோவேட்டா்ஸ் கிளப் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி, உணவு பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் அசோக் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தண்டபாணி முன்னிலை வகித்தாா். நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் சீனிவாசன் பாதுகாப்பான உணவு மற்றும் பாதுகாப்பற்ற உணவு குறித்தும், சத்தான உணவின் அவசியம் குறித்தும் பேசினாா்.
மேலும், தேயிலை, வெல்லம், கடுகு உள்ளிட்ட உணவுப் பொருள்களில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறியும் வழிமுறைகளை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...