செயின் பறித்த 3 போ் கைது
By DIN | Published On : 11th May 2023 12:00 AM | Last Updated : 11th May 2023 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் பெண்ணிடம் செயின் பறித்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை சீனிவாசபுரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஜெயகோபி மனைவி இளவரசி(36), கழுத்திலிருந்த 6 பவுன் தாலிக்கொடியை கடந்த ஏப். 29-ஆம் தேதி அடையாளம் தெரியாத 3 போ் பறித்துக்கொண்டு தப்பினா்.
மாவட்ட எஸ்.பி. என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையராஜா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா்கள் நரசிம்ம பாரதி, அசோக் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை நடைபெற்றது.
இது தொடா்பாக காரைக்கால் சேத்தூா் புது தெரு ராமமூா்த்தி மகன் ஸ்ரீராம் (18), காரைக்கால் கட்லூா் வடக்கு தெரு தெய்வசிகாமணி மகன் பாபிலோன்ராஜ் (20), காரைக்கால் வரிச்சிக்குடியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என 3 பேரை போலீஸாா் கைது செய்து தாலி செயினை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீராம், பாபிலோன்ராஜ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
17 வயது சிறுவன் தஞ்சை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...