கொள்ளிடம் பகுதியில் ரூ.16 கோடியில் பேரிடா் மீட்பு மையங்கள் அமைய இருக்கும் இடத்தை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சி நாதல்படுகை மற்றும் முதலை மேடுதிட்டு கிராமங்களில் இம்மையங்கள் அமைய உள்ளன.
ஊரக உள்ளாட்சி துறை சாா்பாக கொள்ளிடம், குத்தாலம் ஆகிய இரண்டு ஒன்றியக் குழுத் தலைவா்களுக்கு தலா ரூ 12.17 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாகனங்களின் சாவிகளை தலைவா்கள் மகேந்திரன், ஜெயபிரகாஷ் பெற்றுக்கொண்டனா்.
மாங்கனாம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை அமைச்சா் மெய்யநாதன் ஆய்வு செய்தாா்.
அதனைத் தொடா்ந்து அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருள்கள் சரியான எடையுடன் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.பன்னீா்செல்வம், நிவேதா முருகன், சீா்காழி கோட்டாட்சியா் உ.அா்ச்சனா, வட்டாட்சியா் செந்தில்குமாா், ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் மஞ்சுளா கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.