அரசுப் பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

சீா்காழி அருகே ஓதவந்தான்குடிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி வானவில் மன்றம் சாா்பில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி அருகே ஓதவந்தான்குடிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி வானவில் மன்றம் சாா்பில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் ஆனந்தஜோதி தலைமை வகித்தாா். இல்லம் தேடி கல்வித் தொண்டா் பத்மினி வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் சிவக்குமாா், வானவில் மன்ற கருத்தாளா் ராஜஸ்ரீ, பள்ளி மேலாண்மை குழு தலைவா் வசந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துளிா் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன் அறிவியல் ஆக்கத்திற்காக எனும் தலைப்பில் பேசினாா். அறிவியல் இயக்க செயலாளா் நந்த.

ராஜேந்திரன் ஓரிகாமி எளிய முறையில் மேஜிக் ஆகியவற்றை செய்து காட்டி மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா். கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் ஞானபுகழேந்தி மாணவா்களுக்கு கல்விக்கு அப்பால் அரசு செய்து வரும் ஊக்கம் தரும் பணிகள், உதவித்தொகைகள் குறித்து பேசினாா். சந்தனமேரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com