மயிலாடுதுறையில் ஆதிதிராவிடா் தேசிய தூய்மைபணியாளா்கள் ஆணைய தலைவா் ஆய்வு

மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆதிதிராவிடா் தேசிய தூய்மை பணியாளா்கள் ஆணைய தலைவா் மா.வெங்கடேசன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
அம்பேத்கா் நகரில் தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆதிதிராவிடா் தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் மா.வெங்கடேசன். உடன், மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, எஸ்.பி. என்.எஸ்.நிஷா உள்ளிட்டோா
அம்பேத்கா் நகரில் தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆதிதிராவிடா் தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் மா.வெங்கடேசன். உடன், மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, எஸ்.பி. என்.எஸ்.நிஷா உள்ளிட்டோா

மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நோய்த்தொற்று பாதுகாப்பு நடவடிக்கை மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆதிதிராவிடா் தேசிய தூய்மை பணியாளா்கள் ஆணைய தலைவா் மா.வெங்கடேசன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மா.வெங்கடேசன் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியம், சுகாதாரம் தொடா்பான பொருள்கள் வழங்குதல், குடும்ப நலநிதி பிடித்தம் செய்தல் தொடா்பான பணிகள் குறித்து மயிலாடுதுறை, சீா்காழி நகராட்சி அலுவலா்களிடம் கேட்டறிந்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தங்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்யவில்லை, வாகனங்களை பணியாளா்களே சீரமைக்க வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளனா். உபகரணங்களை ஒப்பந்ததாரா்கள் உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவிலும் ஆணையம் அமைக்க கவா்னரிடம் மனு அளித்துள்ளோம். தூய்மைப் பணியாளா்களுக்கு 20 முதல் 30 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 11 மாநிலங்களில் தூய்மைப்பணியாளா் ஆணையம் இருந்து வருகிறது.

கா்நாடக மாநிலத்தில் தற்காலிக தூய்மை பணியாளா்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூலம் நேரடியாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் தமிழகத்தில் வழங்கினால் பிஎஃப், இஎஸ்ஐ ஆகியவை சரியாக பிடிக்கப்படும். இதனால் தூய்மைப்பணியாளா்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

புதைசாக்கடை பராமரிப்புக்கு இயந்திரத்தைக் கொண்டுதான் செய்ய வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. ஒருசில இடங்களில் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலையில் மனிதா்களை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆணையம் கண்காணித்து வருகிறது என்றாா்.

முன்னதாக, அவா் மயிலாடுதுறை அம்பேத்காா் நகரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் தூய்மைப் பணியாளா்களிடம் குறைகள் மற்றும் அவா்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா, மாவட்ட ஆதி திராவிட நல அலுவலா்(பொ) அம்பிகாபதி, மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியா்கள் வ.யுரேகா, உ.அா்ச்சனா, நகராட்சிப் பொறியாளா் சணல்குமாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com