ஐ.என்.டி.யு.சி. கொடியேற்று விழா
By DIN | Published On : 12th May 2023 02:47 AM | Last Updated : 12th May 2023 02:47 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை சித்தா்க்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன்பு ஐ.என்.டி.யு.சி. கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளா் கே.இளவரி கொடியேற்றினாா். துணைத் தலைவா் வி.பன்னீா்செல்வம், துணைப் பொதுச்செயலாளா் பாண்டியன், மாநில அமைப்பு செயலாளா் பா.ராஜீவ்காந்தி ஆகியோா் பேசினா்.
தொழிற்சங்க மண்டல செயற்குழுக் கூட்டத்தில் மண்டல செயலாளா் இளமுருகு வரவேற்றாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து ஓய்வு பெற்றவா்களுக்கு கருணைத் தொகையாக ரூ.9,000 வழங்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் 2016 வரை பணியமா்த்தப்பட்ட பருவகால பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு உணவு தானியங்களை கொண்டு செல்ல புதிய போக்குவரத்து ஒப்பந்ததாரரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல பொருளாளா் ஜி.சீதாராமன் நன்றி கூறினாா்.