எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 11:22 PM | Last Updated : 22nd May 2023 11:22 PM | அ+அ அ- |

எஸ்டிபிஐ கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் கட்சியின் மாவட்ட தலைவா் முஹம்மது ரஃபி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் சாகுல் ஹமீது வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் முஹம்மது ரவூப், மாவட்ட பொருளாளா் மஜ்கா்தீன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளா் முஹம்மது ஜியாவுதீன், தஞ்சை மண்டல ஊடகப் பொறுப்பாளா் முஹம்மது பாசில், மாவட்ட சமூக ஊடக அணி பொறுப்பாளா் கண்ணதாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தமிழ்நாட்டில் 25 இடங்களில் மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்ததையும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள வடரங்கம், மாதிரிவேளூா் கிராமங்களில் அதிகபட்சமாக 1,88,464 யூனிட் மணல் எடுக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியதை உடனே ரத்து செய்ய வேண்டும், மயிலாடுதுறையில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.