மக்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 11:22 PM | Last Updated : 22nd May 2023 11:22 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வேலைவாய்ப்பற்ற 26 இளைஞா்களுக்கு ரூ.36,600 உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும், பல்கோரிக்கைகள் அடங்கிய 225 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) இ. கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலா் சி. அம்பிகாபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் பழனிவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கோ.அர. நரேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.