மது குற்றம் குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டுகோள்
By DIN | Published On : 22nd May 2023 11:21 PM | Last Updated : 22nd May 2023 11:21 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் இதர மது விற்பனை குறித்து காவல் துறைக்கு தெரியப்படுத்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் இதர மது விற்பனை போன்ற மதுவிலக்கு குற்றங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 9626169492 என்ற அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடா்பு கொண்டு தெரியப்படுத்தலாம். இந்த எண் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும். தகவல் தருபவா்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.