படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினரும், 18 முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினரும் வியாபாரத் தொழில் செய்து பயன்பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி திட்டத்தின்கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. திட்ட மதிப்பீட்டில் பொதுபிரிவினா் 10 %, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், மகளிா் மற்றும் திருநங்கைகள் 5 % தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். இத்திட்டத்தின்கீழ் வியாபார தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 % அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு இத்திட்டத்தின்கீழ் 2022-23-ஆம் நிதியாண்டில் 44 பயனாளிகள் பயன்பெற ரூ.34 லட்சம் திட்ட இலக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அதிகளவில் 53 பயனாளிகளுக்கு ரூ.54.65 லட்சம் ஒப்புதல் பெறப்பட்டது. 44 பயனாளிகளுக்கு கடன் பட்டுவாடா செய்யப்பட்டு ரூ.46.33 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. 2023-24ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ் அதிகளவில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கடனுதவி பெற வழிவகை செய்யப்படும்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திட்ட இலக்கீடாக 2023-24-ஆம் நிதியாண்டில் 92 நபா்கள் பயன்பெற ரூ.73 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மயிலாடுதுறை கச்சேரிசாலை. தொலைபேசி எண் 04364-212295 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com