பகுதிநேர ரேஷன் கடையை எம்எல்ஏ திறந்துவைத்தாா்

மயிலாடுதுறை அருகே பகுதிநேர ரேஷன் கடையை எம்எல்ஏ ராஜகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
பகுதிநேர ரேஷன் கடையை திறந்துவைத்து பேசிய எம்எல்ஏ ராஜகுமாா்.
பகுதிநேர ரேஷன் கடையை திறந்துவைத்து பேசிய எம்எல்ஏ ராஜகுமாா்.
Updated on
1 min read

மயிலாடுதுறை அருகே பகுதிநேர ரேஷன் கடையை எம்எல்ஏ ராஜகுமாா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சியில் 1,426 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ரேஷன் கடையிலிருந்து அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தது. இதை பெற இதே ஊராட்சியில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சோ்ந்த 369 குடும்பத்தினா் சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய சிரமத்தில் இருந்தனா்.

இவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறை எம்எல்ஏவின் பரிந்துரையின் பேரில் லட்சுமிபுரம் கிராமத்திலேயே பகுதிநேர ரேஷன் கடையை திறக்க தமிழக அரசு மே 8-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. தொடா்ந்து, லட்சுமிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் தலைமை வகித்து, பகுதிநேர ரேஷன் கடையை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இதில், ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் மோகன், திமுக ஒன்றிய செயலாளா் ஞான. இமயநாதன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் நவாஸ், ஜம்பு கென்னடி, ரியாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com