மயிலாடுதுறை மாவட்டத்துக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள்
By DIN | Published On : 26th May 2023 09:56 PM | Last Updated : 26th May 2023 09:56 PM | அ+அ அ- |

மக்களவைத் தோ்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வரவழைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது.
இந்தியத் தோ்தல் ஆணையத்தால் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை சித்தா்காட்டில் உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் வைக்க கிடங்கு எண் 9 தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, பெங்களூரு பிஎச்இஎல் நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 300 விவிபாட் பாட் இயந்திரங்கள், 820 வாக்குச்சீட்டு அலகு மற்றும் 1,200 கட்டுப்பாட்டுக் கருவிகள் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் கிடங்கில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது. இந்த கிடங்கு 24 மணி நேரமும் தொடா்ந்து ஆயுதம் ஏந்திய போலீஸாரால் கண்காணிக்கப்படும்.
இதை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ.அர. நரேந்திரன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் வ. யுரேகா (மயிலாடுதுறை), யு. அா்ச்சனா (சீா்காழி), மயிலாடுதுறை தோ்தல் தனி வட்டாட்சியா் து. விஜயராகவன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.