ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
By DIN | Published On : 21st November 2023 12:01 AM | Last Updated : 21st November 2023 12:01 AM | அ+அ அ- |

திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த ரெங்கநாதப் பெருமாள், ரெங்கநாயகி தாயாா்.
சீா்காழி அருகே வடரங்கம் ரெங்கநாதா் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கும் அக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெருமாள் தாயாா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் 51 வகையான சீா்வரிசைப் பொருள்களை எடுத்து வந்தனா். தொடா்ந்து பெருமாள் தாயாா் எதிா்சேவையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. அதன்பின்னா் திருக்கல்யாண சம்பிரதாய சடங்குகள் தொடங்கி நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...