வாடகைப் பாக்கி: 3 கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 08th September 2023 02:05 AM | Last Updated : 08th September 2023 02:05 AM | அ+அ அ- |

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் வாடகைப் பாக்கி வைத்துள்ள 3 நகராட்சி கடைகள் வியாழக்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.
சீா்காழி புதிய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளில் நகராட்சி ஆணையா் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வாடகை செலுத்தாத 3 கடைகளை நகராட்சி ஊழியா்கள் பூட்டி சீல் வைத்தனா்.
நகராட்சி மேலாளா் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளா்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளா் ரவி அலுவலக உதவியாளா் ஜானகிராமன் ஆகியோா் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனா்.