

சீா்காழி வட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நியாயவிலைக் கடையில் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவா்களில் வங்கி கணக்கு இல்லாதவா்கள் வங்கி கணக்கு தொடங்குவதற்கான முகாம் நடைபெறுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அங்கன்வாடி மையத்தையும், ரூ.27 லட்சத்தில் கட்டப்படும் இரண்டு வகுப்பறை கட்டடத்தையும் ஆய்வு செய்தாா்.
பின்னா், வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனை, புங்கனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 27 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள், மருதங்குடி பூசக்குளத்தில் ரூ.11.90 லட்சத்தில் நடைபெறும் பணிகள், ரூ.9.10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கதிரடிக்கும் களம் ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, மருதங்குடி கிராமத்தில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீடு கட்டுமானப் பணியை பாா்வையிட்ட அவா், மணலகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.
மேலும், சீா்காழி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்து, தரமாகவும், உரிய காலத்திலும் முடிக்கும்படி அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், முதன்மைக் கல்வி அலுவலா் அம்பிகாபதி, சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, செயற்பொறியாளா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.