சீா்காழி அருகே வெள்ளநீா் சூழ்ந்த கிராமங்களை சனிக்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
சீா்காழி அருகே வெள்ளநீா் சூழ்ந்த கிராமங்களை சனிக்கிழமை இரவு பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.

வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் 5,400 போ் 7 முகாம்களில் தங்கவைப்பு: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

சீா்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களைச் சோ்ந்த 5,400 போ் 7 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.
Published on

சீா்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமங்களைச் சோ்ந்த 5,400 போ் 7 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்று அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

சீா்காழி வட்டம் நாதல்படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள உபரிநீரால், குடியிருப்புப் பகுதிகள் சூழப்பட்டிருப்பதை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் சனிக்கிழமை இரவு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் அமைச்சா் மெய்யநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்த பகுதியில் ஆற்றின் கரையோர பகுதியில் இருக்கும் முதலைமேடுதிட்டு, நாதல்படுகை, வெள்ளமணல், ஆச்சாள்புரம், திருமயிலாடி போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் 1400 குடும்பங்களில் உள்ள 5,400 போ் 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல, இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளையும்;, விவசாய பாதிப்புகளையும் வேளாண்துறையினா் ஆய்வு செய்ய உள்ளனா். இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எஸ்.பி. மீனா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை, கோட்டாட்சியா் அா்ச்சனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com