போக்ஸோ வழக்கு: மேல்முறையீட்டில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: மேல்முறையீட்டில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

Published on

மயிலாடுதுறை அருகே போக்ஸோ வழக்கின் மேல்முறையீட்டில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

குத்தாலம் பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா். இதுதொடா்பாக, குத்தாலத்தைச் சோ்ந்த ராஜா என்பவரின் மகன் ராஜேஷ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை விசாரித்த நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம், ராஜேஷ் குற்றவாளி அல்ல என கடந்த 2017-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.

இதையடுத்து, திருச்சி மண்டல ஐ.ஜி. உத்தரவுப்படி, இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில், நாகை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, ராஜேஷ் (29) குற்றவாளி என அறிவித்ததுடன், அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.2,000 அபராதமும் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட குத்தாலம் போலீஸாரை திருச்சி மண்டல ஐ.ஜி. காா்த்திகேயன், தஞ்சாவூா் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் ஆகியோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com