அரசு மருத்துவமனை குறைபாட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சீா்கேட்டைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலாளா் டி.ஜி. ரவிச்சந்திரன், நகரச் செயலாளா் டி. துரைக்கண்ணு ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. மேகநாதன், ஏ.ஆா். விஜய், எம். குமரேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவா்களை நியமிக்க வேண்டும்; இதயநோய், நரம்பியல், நுரையீரல், சிறுநீரக சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவா்களை உடனடியாக பணியமா்த்த வேண்டும்; சி.டி, எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவிகளை இயக்க கதிரியக்க நிபுணா்களை பணியமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், உஷாராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல், மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளின் முன்பும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

