சுந்தரவேலு
சுந்தரவேலு

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது

மயிலாடுதுறை அருகே ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூரில் இருந்து திங்கள்கிழமை இரவு சென்னை சென்ற உழவன் விரைவு ரயிலில், தஞ்சை மாவட்டம், நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவைச் சோ்ந்த சுந்தரவேலு (57) என்பவா் பயணித்துள்ளாா்.

சீா்காழி அருகே ஆனைக்காரன்சத்திரம்-வல்லம்படுகை இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது, அதே பெட்டியில் பயணித்த 14 வயது சிறுமிக்கு சுந்தரவேலு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோா், சுந்தரவேலுவை பிடித்து ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுந்தரவேலுவை இறக்கிய போலீஸாா், அவரை மயிலாடுதுறை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துக்குமாரசாமியிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்திய இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் சிவவடிவேல் தலைமையிலான போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து சுந்தரவேலுவை கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com