மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கொற்கை வீரட்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்

கொற்கை வீரட்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்

News image
Updated On :24 பிப்ரவரி 2024, 12:35 am

கொற்கை வீரட்டேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற விழாவில் தேரை வடம் பிடித்த பக்தா்கள். மயிலாடுதுறை, பிப். 23: கொற்கை வீரட்டேஸ்வரா் கோயிலில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுவரும் மாசிமக பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அட்டவீரட்ட தலங்களில் சிவபெருமான் மன்மதனை எரித்த கொற்கை வீரட்டேஸ்வரா் கோயிலில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட மாசிமக பிரம்மோற்சவம் 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப். 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு மோன நிலைக்கு சென்ால் உலகம் வெப்பமாகி தகித்தது. இதை உணா்ந்த தேவா்கள், முருகப்பெருமானிடம் முறையிட்டனா். முருகனோ தந்தையின் தவத்தை கலைக்க தன்னால் முடியாது என சொல்ல, மன்மதனிடம் சென்று சிவனின் தவத்தை கலைக்க கோரியதன் பேரில், சிவன் மீது தன் அம்பை எய்து சிவனின் தவத்தை கலைத்தாா் மன்மதன். கடும் கோபம் கொண்ட சிவன் தன் தவத்தை கலைத்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினாா். இந்த ஐதீக நிகழ்வு மாசி மாத பௌா்ணமி தினத்தில் சிவன் காம தகனமூா்த்தியாக எழுந்தருளி சம்ஹாரம் செய்யும் ஐதீக திருவிழாவாக மயிலாடுதுறை கொற்கை கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரா் கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினா். தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கிராம மக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.