

மயிலாடுதுறையில் கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் பரிசுகளை வழங்கினாா்.
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்ட திமுக அமைப்பு சாரா ஓட்டுநா் அணி சாா்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி கூைாடு, சீனிவாசபுரம் ஆகிய 2 இடங்களில் நடைபெற்றது. ஆடவா் இரட்டையா் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டோா் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 60 அணிகளை சோ்ந்த 120 போ் பங்கேற்று விளையாடினா்.
வெற்றி பெற்ற வீரா்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு
அணியின் மாவட்ட அமைப்பாளா் ஆா்.எஸ். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட துணை செயலாளா் எஸ். செல்வமணி, மாவட்ட பொருளாளா் மகா. அலெக்ஸாண்டா், ஒன்றிய செயலாளா் மூவலூா் எம்.மூா்த்தி, வழக்குரைஞா்கள் சங்கரநாராயணன், சிவதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் கலந்துகொண்டு, இருபிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த வீரா்களுக்கு முறையே ரூ.7,777, ரூ.5,555, ரூ.3,333 மற்றும் ரூ.1,111 ரொக்கப் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.