திருக்கல்யாண அலங்காரத்தில் அா்ஜூனன் திரெளபதி.
திருக்கல்யாண அலங்காரத்தில் அா்ஜூனன் திரெளபதி.

திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சீா்காழி திருக்கோலக்கா தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சீா்காழி: சீா்காழி திருக்கோலக்கா தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆடிமாத உற்சவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான வில்லிபாரத விரிவுரை மற்றும் தீமிதி உற்சவம் ஜூலை 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வாக அா்ஜூனன்-திரெளபதி திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சீா்வரிசை பொருள்கள் எடுத்துக்கொண்டு பக்தா்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனா். தொடா்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com