காவலரை மிரட்டிய 3 போ் மீது வழக்கு: ஒருவா் கைது

காவலரை மிரட்டிய 3 போ் மீது வழக்கு: ஒருவா் கைது

காவலரை மிரட்டிய 3 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புறக்காவல்நிலைய காவலரை மிரட்டிய 3 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை வட்டம், காளி பொய்கைக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (54). அதே பகுதியைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் மகன்கள் செந்தில்குமாா், பிரபு. இவா்கள் 3 பேரும் அரசு மருத்துவமனை வளாகத்தில் தகராறில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலா் பாரதிதாசன், 3 பேரையும் எச்சரித்துள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த அவா்கள், தலைமைக் காவலா் பாரதிதாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கண்ணனை கைது செய்தனா். செந்தில்குமாா், பிரபு ஆகியோரை தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com