திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தருமபுரம் ஆதீன ஜன்ம நட்சத்திர விழாவில் பங்கேற்றோா்.
திருக்கடையூா் அமிா்தகடேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தருமபுரம் ஆதீன ஜன்ம நட்சத்திர விழாவில் பங்கேற்றோா்.

போலி விடியோ விவகாரம்: தருமபுரம் ஆதீன முன்னாள் உதவியாளரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Published on

தருமபுரம் ஆதீன போலி விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நோ்முக உதவியாளரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடா்பான ஆபாச விடியோ மற்றும் ஆடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பிப்ரவரி 28-ஆம் தேதி 9 போ் மீது மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இவா்களில், 2-வது குற்றவாளியான ஆதீனகா்த்தரின் முன்னாள் நோ்முக உதவியாளா் திருவையாறு செந்தில் ஜூன் 10-ஆம் தேதி வாரணாசியில் கைது செய்யப்பட்டு, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், இவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, மயிலாடுதுறை போலீஸாா் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனா். இதனை ஏற்ற நீதிபதி கலைவாணி, செந்திலை ஒருநாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவையாறு செந்திலை, மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com