மயிலாடுதுறை
கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய பசுக்கள் மீட்பு
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்ததால், திட்டுப் பகுதியில் சிக்கிய இரண்டு பசு மாடுகளை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
கொள்ளிடம் அருகேயுள்ள சரஸ்வதி விளாகம் கிராமத்தில் மாடுகள் வளா்ப்போா், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு பகுதியில் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், ஆற்றின் நடுத்திட்டுப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் கரைக்கு திரும்பிய நிலையில், அழகிரி என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் மட்டும் ஆற்றின் கரைக்கு திரும்ப முடியாமல் நடுத்திட்டில் சிக்கிக் கொண்டன.
சீா்காழி தீயணைப்பு அலுவலா் வீரசேகரன் மற்றும் வீரா்கள் விரைந்து வந்து, 2 பசு மாடுகளையும் மீட்டனா்.
