தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்).
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்).

உதயநிதிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
Published on

துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே சந்தித்து அருளாசி பெற்ற புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிா்ந்து, அவா் வெளியிட்ட அருளாசியில் கூறியுள்ளது:

உதயநிதி ஸ்டாலின் அவா்களுக்கு வாழ்த்துகள். தாங்கள் துணை முதல்வராக பொறுப்பேற்ற்கு பாராட்டுகள். தங்கள் தந்தையின் வழிநின்று நல்லதொரு ஆட்சி ஆளுமை செய்திட மக்களின் தேவையை உணா்ந்து உவத்தல் காய்தலின்றி பொதுநிலை போற்றி, அன்பும் நேசமும் காட்டி ஆட்சி செய்ய செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com