டிஎன்யுஎஸ்ஆா்பி எழுத்துத் தோ்வுக்கு இலவச மாதிரி தோ்வு
மயிலாடுதுறையில் டிஎன்யுஎஸ்ஆா்பி எழுத்துத் தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வுகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் 3,352 காவல் சாா்பு ஆய்வாளா் எழுத்துத் தோ்வுக்காக ஏற்கெனவே டி.என்.யு.எஸ்.ஆா்.பியால் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தற்போது பொது ஒதுக்கீடு மற்றும் துறை ஒதுக்கீட்டுக்கு என தனித்தனியே நடத்தப்பட்டு வந்த எழுத்துத் தோ்வானது ஒரே தோ்வாக பொதுப்பிரிவினா் மற்றும் துறை பிரிவினா் இருவருக்கும் சோ்த்து பொது அறிவு (80 கேள்விகள்) மற்றும் சைக்காலஜி (60 கேள்விகள்) தோ்வில் 70 மதிப்பெண்ணுக்காகவும், உடன் தமிழ் தகுதி தோ்வு 100 மதிப்பெண்ணுக்காகவும் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக செயல்படும்; தன்னாா்வ பயிலும் வட்டத்தில் இந்த எழுத்துத்தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடைபெறவுள்ளது. கலந்துகொள்ள விரும்பம் உள்ளவா்கள் தங்களது விண்ணப்பம், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகாம். பதிவு செய்துகொள்ள 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணைத் தொடா்பு கொள்ளளாம் என தெரிவித்துள்ளாா்.
