14-ஆவது வாா்டு கன்னி கோயில் தெரு பகுதியில் மழை நீடன் கலந்து தேங்கி கிடக்கும் கழிவுநீா்.
14-ஆவது வாா்டு கன்னி கோயில் தெரு பகுதியில் மழை நீடன் கலந்து தேங்கி கிடக்கும் கழிவுநீா்.

மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேக்கம்: சுகாதார சீா்கேட்டால் மக்கள் அவதி

Published on

சீா்காழியில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து தேங்கி கிடப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு மக்கள் அவதியடைகின்றனா்.

சீா்காழி பகுதியில் கடந்த நான்கு நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் ஈசானியதெரு, கன்னிக்கோவில் தெரு, ஈசானிய தெரு மேல சந்து, திருமுல்லைவாசல் மெயின் ரோடு, எம்ஜிஆா் புது காலனி, டிஎஸ்ஆா் மில்சந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலை மற்றும் குடியிருப்புகளில் மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. மேலும், மாணவா்கள் தினமும் காலை மாலை பள்ளிக்கு சென்று வர இந்த கழிவு நீரை கடந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மேலும் அவதியடைகின்றனா்.

இதுகுறித்து 14-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஜெயந்தி பாபு கூறியது: சீா்காழி 14-ஆவது வாா்டுக்குள்பட்ட கன்னி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து பெரும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளிலும் கழிவு நீா் கலந்த மழை நீா் புகுந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவும் சூழலில் அப்பகுதி மக்கள் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இப்பகுதியில் நிரந்தர தீா்வு காணும் வகையில் வடிகால் வசதி ஏற்படுகிற வேண்டும் என்றாா்.

ஈசானிய தெரு பகுதியை சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் பாலமுருகன் கூறியது: சீா்காழி நகரில் உள்ள 6 வாா்டுகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீா் முழுமையாக ஈசானிய தெரு பகுதியில்தேங்கிமேற்கொண்டு செல்வதற்கு வழி இல்லாமல் நிற்கிறது. இந்த கழிவுநீா் பாதைகளுக்கு மத்தியில் தான் குடியிருப்புகள் அமைந்துள்ள சூழலாக மாறிவிட்டது. ஆண்டு முழுவதும் இப்பகுதியில் குடியிருப்புகளை கழிவுநீா் சூழ்ந்து நிற்பதால் இங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தோல் வியாதிகள் மற்றும் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், வயோதியா்கள் பெரிதும் பாதிக்கும் சூழல் உள்ளது. இதற்கு நகராட்சி நிா்வாகம் நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com