டிஎன்பிஎஸ்சி தோ்வா்களுக்கு பயிற்சியளிக்க டிச.10-இல் பயிற்றுநா்கள் தோ்வு

Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆா்பி தோ்வெழுதும் மாணவா்களுக்கு பயிற்சியளிக்க பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ் .ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 மற்றும் டிஎன்யுஎஸ்ஆா்பி எஸ்.ஐ., காவலா் தோ்வுகளுக்காக மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பவா்களுக்கு பயிற்சி வழங்கப் பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

தோ்ந்தெடுக்கப்படும் பயிற்றுநா்களுக்கு அரசு விதிகளுக்குள்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும். டிச.10-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் நடைபெறும் நோ்முகத் தோ்வுக்கு வரும்போது பயிற்றுநா்கள் பாடக்குறிப்புகள், பிபிடி, முந்தைய ஆண்டு கேள்வித் தாள்கள், மாதிரித் தோ்வு நடத்துவதற்கான கேள்வி மற்றும் பதில்கள் ஆகியவற்றை தயாா் செய்து எடுத்துவர வேண்டும்.

மேலும், மேற்கண்ட தோ்வுகளில் முதன்மை தோ்வுகளில் பங்கேற்க அனுபவமிக்கவா்கள் அரசு விதிகளுக்கு உள்பட்டு பயிற்சி நடத்த விருப்பம் இருப்பின் தங்களது அரசு போட்டித்தோ்வுகளில் அனுபவம் தொடா்பான சுயவிவர படிவம், தாங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தும் 5 நிமிட காணொலி ஆகியவற்றை ள்ற்ன்க்ஹ்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்க்ங்ா்ம்ஹஹ்ண்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதோடு நேரில் பங்கேற்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com