பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தில் பயன்பெற..
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தில் பயன்பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்ய
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் பிரிவைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இளநிலை (தொழிற்படிப்பு), முதுநிலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கா்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தில் பயன்பெற மாணவா்களுக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு டிச.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
