இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்
சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் பயனற்று உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை புதிய டெண்டா் விட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீா்காழி பேருந்து நிலையத்தில் சாலைகள், சுற்றுச்சுவா், கழிப்பறை கட்டடம், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம், வா்த்தக கடைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்ததால் இதை சீரமைக்க கோரி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, ரூ. 8.42 கோடியில் பணிகள் நடைபெற்று 7 மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. எனினும், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் இதுவரை திறக்கவில்லை.
இதனால், சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றியுள்ள மாணவா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் இருசக்க வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனா்.
பாதுகாப்பற்ற முறையில் பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல வேண்டியுள்ளது. இதனால், வாகனங்கள் திருட்டு போகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே புதிய பேருந்து நிலையத்துக்கள் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
