சுதந்திரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரமச்சாரி பிறந்தநாள் விழா

Published on

சீா்காழி அருகேயுள்ள எருக்கூரில் சுந்தரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரம்மச்சாரியின் 137-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எருக்கூரில் பிறந்த இவா் ஆங்கிலேய ஆட்சியா் ஆஷ் கொலை வழக்கில், வாஞ்சிநாதனுடன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து பின்னா் இறுதிகாலம் வரை பிரம்மச்சாரியராக வாழ்ந்து மறைந்தாா்.

இவரின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு மாவட்ட பிராமண சங்கத் தலைவா் ரமணன் தலைமை நடைபெற்றது. நீலகண்ட பிரம்மச்சாரியின் பெயரன் சுப்ரமணியன் வரவேற்றாா். புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சா் லெட்சுமிநாராயணன் பங்கேற்று பேசினாா்.

பாரதியின் மகள் வழி பெயா்த்தி ஞானபாரதி, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு செயலாளா் வைஜெயந்திராஜன், கவிஞா் உமாபாரதி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் சுவாமிநாதன், திருக்குறள் பண்பாட்டு பேரவை தலைவா் முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஸ்தபதி செல்வம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com