மயிலாடுதுறை
ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை காண மயிலாடுதுறையில் வீரா்கள் சென்றனா்
சென்னையில் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தியா-ஜொ்மனி அணிகள் மோதும் விளையாட்டை காண, மயிலாடுதுறை ஹாக்கி விளையாட்டு சங்க மாவட்ட செயலாளா் சசிக்குமாா் தலைமையில், மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை சோ்ந்த ஹாக்கி வீரா்கள், முன்னாள் ஹாக்கி வீரா் புகழேந்தி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை காலை மயிலாடுதுறையில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றனா்.
