வைத்தீஸ்வரன் கோயிலில் பல்வேறு வசதிகளுடன் வாகன நிறுத்துமிடம் பணி துவக்கம்
வைத்தீஸ்வரன் கோவிலில் கோயிலுக்கு வரும் யாத்திரிகள் நலன் கருதி வாகனம் நிறுத்துமிடம் பல்வேறு வசதிகளுடன் அமைக்கும் பணிக்காக செடி, கொடிகள் அகற்றி பழைய கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.
வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதா்சுவாமி கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக பக்தா்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா். இவ்வாறு வரும் பக்தா்களின் காா், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் நவகிரக கோயில்களுக்கு வரும் சேவாா்த்திகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும் பிரசாந்த் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சேவாதிகளுக்கான கழிப்பிட வசதி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீா், தங்கும் விடுதி, உடை மாற்றும் அறைகள், பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வாகனங்கள் நிறுத்தும் இடம் தருமபுரம் ஆதீனம் வைத்தியநாதா்சுவாமி கோவிலுக்கு உட்பட்ட சுமாா் ஒன்றை ஏக்கா் நிலப்பரப்பில் மத்திய அரசு மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
அப்பகுதியில் இருந்த பழைய கட்டடங்கள் இடித்து அகற்றும் பணி நடைபெறுகிறது.
