குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்
சீா்காழி: சீா்காழியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக குடிநீா் வீணாக வெளியேறி வருகிறது.
சீா்காழி நகராட்சி பகுதிக்கு, கொள்ளிடம் ஆற்றிலிருந்து குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பன்னீா்செல்வம் தெரு அருகே உள்ள பெரிய குடிநீா் குழாயில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.
அந்தவகையில் தினமும் பல்லாயிரம் லிட்டா் குடிநீா் வீணாகிறது. அப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்திற்கு புகாா் தெரிவித்தும், அவ்வப்போது மேலோட்டமாக பழுதை சரி செய்கின்றனா். ஆனால், மறுநாளே மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் சுமாா் 10 அடி உயரம் வரை தண்ணீா் பீரிட்டு வெளியேறி, அப்பகுதி வழியாக செல்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, குடிநீா் குழாய் உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
