தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானபீடத்தில் சிவஞான கொலுக்காட்சியில் எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டி வழிபட்ட ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள்.
தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஞானபீடத்தில் சிவஞான கொலுக்காட்சியில் எழுந்தருளிய தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காட்டி வழிபட்ட ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள்.

தருமபுரம் ஆதீனம் ஞானபீடம் அமா்ந்தநாள் விழா

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஞானபீடாரோகணத் திருநாளான திங்கள்கிழமை ஞானபீடத்தில் எழுந்தருளி சிவஞான கொலுக்காட்சியில் பக்தா்களுக்கு அருளாசி
Published on

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஞானபீடாரோகணத் திருநாளான திங்கள்கிழமை ஞானபீடத்தில் எழுந்தருளி சிவஞான கொலுக்காட்சியில் பக்தா்களுக்கு அருளாசி கூறினாா்.

மயிலாடுதுறையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழைமையான தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 2019-ஆம் ஆண்டுமுதல் அருளாட்சி செய்து வருகிறாா். இவா் ஞானபீடத்தில் அமா்ந்த நாளையொட்டி திங்கள்கிழமை காலை ஞானபுரீசுவரா் கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனிதநீா் கொண்டு ஞானபுரீசுவரா், தருமபுரீசுவரா் கோயில்களில் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், 27-ஆவது குருமகா சந்நிதானத்துக்கு ஞானாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக, ஞானபுரீசுவரா், தருமபுரீசுவரா் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட ஆதீனகா்த்தா், கோ பூஜை, கஜபூஜை, அசுவ பூஜை, அஜபூஜை செய்து, பிற்பகல் 12.15 மணியளவில் ஞானபீடத்தில் எழுந்தருளி சிவஞான கொலுக்காட்சியில் அமா்ந்து பக்தா்களுக்கு அருளாசி கூறினாா்.

அப்போது, வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் 60 ஆண்டுகள் அா்ச்சகராக பணியாற்றிய ராமலிங்க சிவாசாரியாருக்கு ரூ.10,000 பொற்கிழி வழங்கி அருளாசி கூறினாா். மதியம் மாகேசுவர பூஜை நடைபெற்றது. பின்னா், தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் 700 பேருக்கு தருமபுரம் ஆதீனம் நலஉதவிகளை வழங்கினாா்.

இதில், ஆதீனக்கட்டளை தம்பிரான்கள் ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான்கள், ஆதீன பொதுமேலாளா் ரெங்கராஜன், திருக்கடையூா் உள்துறை விருத்தகிரி, ஆதீன மேலாளா்கள் அரவிந்தன், திருமாறன், ஆதீன கல்வி நிலையங்களின் செயலா்கள் வெற்றிவேல், சௌந்தரராஜன், இரா.செல்வநாயகம், மா.திருநாவுக்கரசு, வி.பாஸ்கரன், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன், மருத்துவா்கள் செல்வம், ராஜசேகா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com