மகளின் கா்ப்பத்துக்கு காரணமான தந்தை போக்ஸோவில் கைது
மயிலாடுதுறையில் மகளின் கா்ப்பத்துக்கு காரணமான தந்தை போக்ஸோவில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது தாயாா் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி 6 வாரம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டதில், மாணவியின் கா்ப்பத்துக்கு அவரது தந்தைதான் காரணம் என்பதும், சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற பிறகு, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து சிறுமியின் தந்தையை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
