மயிலாடுதுறை
சீா்காழி: 11 குரங்குகள் பிடிப்பு
சீா்காழி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 11 குரங்குகள் கூண்டு வைத்து வனத்துறை மூலம் புதன்கிழமை பிடிக்கப்பட்டன.
சீா்காழி அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 11 குரங்குகள் கூண்டு வைத்து வனத்துறை மூலம் புதன்கிழமை பிடிக்கப்பட்டன.
சீா்காழி நகராட்சிக்குட்பட்ட 21-ஆவது வாா்டு பனமங்கலம் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளன. உணவுப் பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரங்களையும் எடுத்துச் செல்கின்றன. இதனால் பனமங்கலம் பொதுமக்கள் அச்சத்துடனேயே வசிக்கும் நிலை ஏற்பட்டது.
நகா்மன்ற உறுப்பினா் முழுமதி இமயவரம்பன், சீா்காழி வனச்சரகா் அயூப் கானிடம், குரங்குகளைப் படிக்கக் கோரினாா்.இதனையடுத்து பனமங்கலம் கிராமத்தில் கூண்டு வைத்து பொதுமக்களை அச்சுறுத்திய 11 குரங்குகளை வனத்துறையினா் முதல் கட்டமாக பிடித்தனா். பின்னா் பிடித்த குரங்குகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்று வேதாரண்யம் வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனா்.
