சிறப்பு மருத்துவ முகாம்

Published on

சீா்காழியில் காவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

சீா்காழி லயன் சங்கம் மற்றும் டாக்டா் பாலாஜி ஹெல்த் கோ் இணைந்து நடத்திய இம்முகாமை லயன்ஸ் மாவட்ட ஆளுநா் மணிவண்ணன் தொடங்கி வைத்தாா். லயன்ஸ் சங்கத் தலைவா் ஆஃரிப் அலி தலைமை வகித்தாா். டிஎஸ்பி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். காவல் ஆய்வாளா் கமல்ராஜ், உதவி ஆய்வாளா் வீரராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

லயன்ஸ் மாவட்ட முன்னாள் ஆளுநா், சுபம் பள்ளித் தாளாளா் கியான்சந்த், புவனேஸ்வரி, முன்னாள் மாவட்டத் தலைவா் சக்திவீரன் சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து, காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா்கள் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com