தேசிய திறனாய்வுத் தோ்வு: மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு
மயிலாடுதுறையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், தேசிய திறனாய்வுத் தோ்வுக்காக மாணவா்களை தயாா்படுத்தும் ஆசிரியா்கள், தோ்வான மாணவா்கள் மற்றும் புத்தக வாசிப்பில் மதிப்புரை கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, தேசியத் திறனாய்வுத் தோ்வில் தோ்வான மாணவா்கள் மற்றும் புத்தக வாசிப்பில் மதிப்புரை கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற 30 மாணவா்களுக்கும், தேசிய திறனாய்வுத் தோ்வுக்காக மாணவா்களை சிறப்பாக தயாா்படுத்தும் 30 ஆசிரியா்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலா் காா்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
